Sunday, May 25, 2008

நாணமும் வெட்கமும்

நாணமும் வெட்கமும் முழுக்க முழுக்க நன்மையானது
இறைவனன் தூதர் முஹம்மது கூறியது
ஒருவரிடம் நாணமும் வெட்க உணர்வும் இருக்கின்றதெனில் அவரிடமிருந்து எந்தவொரு தீமையையோ அல்லது சீர்கேட்டையோ எதிர்பார்க்க முடியாது. ஆனால் ஒருவரிடம் நாணமோ வெட்க உணர்வோ இல்லையெனில் அவர் எந்த நேரத்தில் எந்த வேலையைச் செய்வார் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாது.

நன்றி ஏன்?

மனிதர்களுக்கு நன்றி செலுத்தாதவன் இறைவனுக்கும் நன்றி செலுத்தாதவனாகத்தான் இருப்பான்.
இறைவனின் தூதர் முஹம்மத் கூறியது.
மற்றவர்கள் தனக்குச் செய்த நல்லுதவிகளுக்காக அவர்களுக்கு நன்றி செலுத்துகின்ற பண்பு ஒருவனிடம் இல்லாமல் போவது மிகப் பெரும் வாய்ப்புக்கேடு ஆகும். ஒருவன் நன்றிகெட்டவனாக நடந்து கொள்கிறான் எனில், அவனிடம் சத்தியத்தை அடையாளங் காண்கின்ற பண்பு இல்லை என்றே சொல்ல வேண்டும். அவனிடம் சத்தியத்தை மதிக்கின்ற பண்பு சுத்தமாக இல்லை என்பதற்கான சான்றாகதான் அந்த நன்றி கெட்ட இழிகுணத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
சத்தியத்தை மதிக்கின்ற பண்பே இல்லாமல் போகும்போது இறைவனுக்கு நன்றி செலுத்துகின்ற அடியானாக அவன் வாழ்வான் என எப்படி எதிர்பார்க்க முடியும்? நன்மைகளையும் நல்லியல்புகளையும் அடையாளங்காண்பதும் அவற்றை மதிப்பதும் சத்தியத்தை ஏற்றுக் கொள்வதும் நல்ல பண்பாகும்.
ஒரு மனிதனிடம் இந்தப் பண்பு இல்லாமல் போனால் அவனிடம் எந்தவொரு நன்மையையும் எப்படி எதிர்பார்க்க முடியும்?

Tuesday, May 20, 2008

(வி)சுவாசம்

காற்றுக்கு எதிராக
கயவர்கள்
பிரச்சாரம் செய்தால்
எத்தனை நாசிகள்
சுவாசத்தை
நிறுத்தும்?
Islam is the Breath of Everyone.