மனிதர்களுக்கு நன்றி செலுத்தாதவன் இறைவனுக்கும் நன்றி செலுத்தாதவனாகத்தான் இருப்பான். இறைவனின் தூதர் முஹம்மத் கூறியது.
மற்றவர்கள் தனக்குச் செய்த நல்லுதவிகளுக்காக அவர்களுக்கு நன்றி செலுத்துகின்ற பண்பு ஒருவனிடம் இல்லாமல் போவது மிகப் பெரும் வாய்ப்புக்கேடு ஆகும். ஒருவன் நன்றிகெட்டவனாக நடந்து கொள்கிறான் எனில், அவனிடம் சத்தியத்தை அடையாளங் காண்கின்ற பண்பு இல்லை என்றே சொல்ல வேண்டும். அவனிடம் சத்தியத்தை மதிக்கின்ற பண்பு சுத்தமாக இல்லை என்பதற்கான சான்றாகதான் அந்த நன்றி கெட்ட இழிகுணத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
சத்தியத்தை மதிக்கின்ற பண்பே இல்லாமல் போகும்போது இறைவனுக்கு நன்றி செலுத்துகின்ற அடியானாக அவன் வாழ்வான் என எப்படி எதிர்பார்க்க முடியும்? நன்மைகளையும் நல்லியல்புகளையும் அடையாளங்காண்பதும் அவற்றை மதிப்பதும் சத்தியத்தை ஏற்றுக் கொள்வதும் நல்ல பண்பாகும்.
ஒரு மனிதனிடம் இந்தப் பண்பு இல்லாமல் போனால் அவனிடம் எந்தவொரு நன்மையையும் எப்படி எதிர்பார்க்க முடியும்?