Tuesday, May 20, 2008

(வி)சுவாசம்

காற்றுக்கு எதிராக
கயவர்கள்
பிரச்சாரம் செய்தால்
எத்தனை நாசிகள்
சுவாசத்தை
நிறுத்தும்?
Islam is the Breath of Everyone.

3 comments:

KARTHIK said...

//Islam is the Breath of Everyone.//

காற்று மதமரியாது.முகவரியில்லா காற்றுக்கு இன்ன மதமெனும் முகவரி வேண்டாமே.

கவிதை நல்லாருக்கு.

HASANI said...

\\
கார்த்திக் said...
//Islam is the Breath of Everyone.//

காற்று மதமரியாது.முகவரியில்லா காற்றுக்கு இன்ன மதமெனும் முகவரி வேண்டாமே.

கவிதை நல்லாருக்கு.

\\
கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கார்த்திக்

இஸ்லாம் என்பது மதமன்று. அது ஒரு வாழ்க்கை நெறி.
முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமானதன்று. மனிதர்கள் அனைவருக்கும் வழிகாட்டி. எனவே தான் இஸ்லாம் என்ற வழிமுறைக்கு எதிரான பிரச்சாரங்கள் எதுவும் அதனைப் பின்பற்ற நினைப்பவர்களைத் தடுத்துவிட முடியாது என்ற கருத்தில் கூறப்பட்டுள்ளது.

KARTHIK said...

விவேகானந்தரின் சிகாகோ சொர்ர்பொழிவு ஒண்ரை இவ்விடத்தில் நினைவு கூர்கிறேன்

காலம் காலமாக இருந்து வரும் கஷ்டம் இது தான். நான் இந்து. நான் என் சிறிய கிணற்றிற்குள் இருந்து கொண்டு என் சிறு கிணறு தான் முழுவுலகம் என்று நினைக்கிறேன். கிறிஸ்தவன் தனது மதமாகிய சிறு கிணற்றிற்குள் அமர்ந்து கொண்டு, தன் கிணறுதான் முழுவுலகம் என்று நினைக்கிறான் அவ்வாறே முகம்மதியனும் தன் சிறு கிணற்றில் உட்கார்ந்து கொண்டு, அது தான் முழுவுலகம் என்று நினைக்கிறான். நமது இந்த சிறிய உலகின் எல்லைகளைத் தகர்த்தெறிய
வேண்டும்.

நமது முன்னால் குடியரசுத்தலைவர் APJ அவர்களும் கடவுளைப்பற்றி இப்படித்தான் கூறுவார்,
உலகில் ஓடுகின்ற எல்லா நதிகளும் கடலைத்தேடி ஒடுவதைப்போல,
நம் ஒவ்வொருவரின் பிரார்த்தனைகளும் சேருமிடம் ஒன்றுதான்.